TAMIL NEWS






 




 ==============================
அமெரிக்கா நிலாவுக்கு போகவே இல்லயாம்..!?

1969-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி நிலவில் முதல் மனித காலடியை எடுத்து வைத்து அந்த விண்வெளி யுத்ததில் வெற்றி அடைந்தது அமெரிக்கா. அதன் பின் தான் மெல்ல மெல்ல கிளம்பின சந்தேகங்கள். அமெரிக்காவின் அப்பலோ விண்கலங்கள், அதன் வீர்ர்கள், அவர்கள் நிலாவிற்கு சென்றது எல்லாம் பொய். அவைகள் எல்லாம் படமாக்கப் பட்டவைகள் என்று புரளிகள் கிளம்பின.



Aசத்தும் இஸ்ரோ : வாய் பிளக்கும் அமெரிக்கா, கனடா, இந்தோனேஷியா..! அப்படியாக அது பொய், படம் பிடிக்கப்பட்டவைகள், புரளிகள் என்று கூறும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் (Conspiracy theorists) குறிப்பிடும் ஆதாரங்கள் தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளன.

காற்றில் ஆடும் அமெரிக்க கொடி :

அமெரிக்கா நிலாவில் முதல் கால் தடம் பதிக்கும் நிகழ்ச்சியானது நேரடி ஒளிப்பதிவில் இருந்தது, அதில் நிலவில் நிலை நிறுத்தப்பட்ட அமெரிக்க கொடியானது காற்றில் ஆடுவதை தெளிவாக காண முடிந்தது.
பள்ளங்கள் இல்லாமை : 
அப்பலோ விண்கலம் நிலவில் தரை இறங்கியதற்க்கான எந்த விதமான பள்ளமும், வீடியோ மற்றும் புகைப்படங்கள் என எதிலும் இல்லை. இறக்கி வைக்கப்பட்டது போல் தான் காட்சியளிக்கிறது.

வான் அலென் ரேடியேஷன் பெல்ட் : 
முதல் முயற்சியிலேயே 'வான் அலென் ரேடியேஷன் பெல்ட்' என்ற கடினமான பூமியின் காந்த சக்தி கதிர்வீச்சை தாண்டி எப்படி நிலாவிற்கு சென்றனர் என்பது இன்றும் கேள்வி குறி தான்..! Show Thumbnail


விளக்கமில்லாத பொருள் : 
வெளியான நிலவில் இறங்கிய புகைப்படம் ஒன்றில், விண்வெளி வீரரின் ஹெல்மாட்டில் விளக்க முடியாத பொருள் ஒன்று பிரதிபளிக்கிறது.


மறைக்கப்பட்ட கேபிள்கள் :
 நிலவின் புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்றபடி விண்வெளி வீரர்கள் கேபிள்களில் இணைக்கப்பட்டு குதித்து குதித்து செல்லப்பட்டனர் என்றும், சில புகைப்படங்களில் கேபிள்களை தெளிவாக பார்க்க முடிகின்றது என்றும் கூறுகிறார்கள் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள். Show Thumbnail




நட்சத்திரமின்மை : 
வெளியான முழு புகைப்பட தொகுப்பு மற்றும் வீடியோ பதிவிலும் எந்தவொரு ஒரு நட்சத்திரமும் பதிவாகவில்லை.


'சி' பாறை :
 வெளியான நிலவில் இறங்கிய புகைப்படம் ஒன்றில், இயற்கைக்கு மாறான முறையில் தெளிவாக 'சி' (C) என்ற எழுத்தை பிரதிபலிக்கும் பாறை..!
பொய்யான கிராஸ்-ஹேர்ஸ் : 
வெளியான நிலவில் இறங்கிய பெரும்பாலான புகைப்படங்களில் கிராஸ்-ஹேர்ஸ்கள் (Cross-hairs) 'எடிட்' (Edit) செய்யப் பட்டுள்ளன, குறிப்பிட்ட புகைப்படத்தில் கிராஸ்-ஹேர்ஸ் ஆனது விண்கலத்திற்கு பின்னால் 'எடிட்' செய்யப்பட்டுள்ளது அதற்கு சான்றாகும்.
டூப்ளிக்கேட் பின்னணிகள் : 
ஒரே மாதிரியான பின்புலம் (Backdrop) கொண்ட பல வீடியோ காட்சிகள்..!




 -------------------------------------------------------------------------------------------------
சீனாவில் பதற்றம் : வானத்தில் 'மிதக்கும் நகரம்', கேமிராவில் பதிவு..!

                     



மக்கள் சாட்சி : 'மிதக்கும் நகரம்' வானத்தில் தோன்றிய அந்த காட்சியை கண்டதாக ஆயிரக்கணக்கான மக்கள் சாட்சி கூற, அந்த காட்சியானது கேமிராவில் பதிவும் செய்யப்பட்டுள்ளது.